Published Date: March 16, 2023
CATEGORY: CONSTITUENCY
காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்திருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு பள்ளிகளில் இலவச காலை உணவு திட்டத்தை அமல்படுத்தியது. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் காலை உணவுத்திட்டத்தின் பயன்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை பகிர்ந்துள்ளார் .இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட 1,543 பள்ளிகளில் 1,319 பள்ளியில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் "காலை உணவு திட்டம் முதலில் மதுரையில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிகளில் 85சதவீதம் வருகை அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்மறையான தாக்கத்தை பதிவு செய்துள்ளது. குழந்தைகள் நமது எதிர்காலம், அவர்களின் நல்வாழ்வு சமூக நீதிக்கு அடித்தளம்" என்று தெரிவித்துள்ளார்.
Media: Dinakaran